ஊரடங்கு உத்தரவு காரணமாக வீடு தேடி வரும் நடமாடும் ATM இயந்திரங்கள்!!!

0
442
ATM machine
ATM machine

வீடு தேடி வரும் ஏடிஎம் இயந்திரங்கள் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் அத்தியாவசிய தேவைகள் கொண்ட கடைகள் மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக ஏடிஎம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி சார்பில் வாடிக்கையாளர் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் நெல்லையில் பொதுமக்கள் பணம் எடுக்க ஏடிஎம் எந்திரத்தை தேடிவராமல் இருக்க சிறப்பு ஏற்பாடாக முக்கிய தெருக்களுக்கு ஏடிஎம் வாகனம் வருகிறது.

ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு வீடு முன்பும் சில நிமிடங்கள் நிற்கும் இந்த ஏடிஎம் எந்திரத்தின் வாகனத்தை நெல்லை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல் சென்னை உள்பட மற்ற நகரங்களிலும் முக்கிய பகுதிகளுக்கு ஏடிஎம் இயந்திரம் கொண்ட வாகனங்களை அனுப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் இதுபோன்ற சிறப்பு வசதிகளை வங்கி நிர்வாகம் செய்து கொடுத்தால்தான் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதை தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது