கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அளித்த பிரபல நடிகர்!!!

0
395
sivakarthikeyan
sivakarthikeyan

கொரொனா வைரஸ் உலக அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 192 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. பல நாடுகளில் லாக் அவுட் முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,297 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,49,090 ஆக அதிகரித்துள்ளது. 1 லட்சத்திற்கு அதிகமனோர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 350 -ஐ நெருங்குகிறது.

கொரோனா வைரஸ் பீதியால் தமிழ் சினிமாவில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு 10 லட்ச ரூபாய் உதவியாக அளித்துள்ளார்.கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 19 ஆம் தேதி முதல் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.

எப்போது படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கும் எனத் தெரியாத நிலையில் சினிமாவில் தினக்கூலிகளாக வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர், தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் 10 லட்சம் ரூபாயை தமிழ் திரை தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கு அளித்துள்ளார்.

இதனையடுத்தும் தற்போது, படப்பிடிப்பு முடங்கியுள்ளதால், 15 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோளை ஏற்று நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.