மீண்டும் தோனி தலைமை.. புதிய அணி உருவாகிறது

0
667
தோணி
தோணி

இந்திய அளவில் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானத்தை அகமதாபாத்தில் கட்டும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. அங்கு ஆசிய லெவன் VS வேர்ல்ட் லெவன் அணிகளுக்கிடையே போட்டிகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் கட்டுமான பணி தாமதம் ஏற்பட்டதால் இந்த போட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த போட்டியை தற்போது வங்கதேச கிரிக்கெட் வாரியம் நடத்துவதாக முன்வந்துள்ளது. வரும் மார்ச் மாதம் 18 தேதி மற்றும் 21ம் தேதிகளில் டி20 மேட்ச் நடக்க உள்ளது. இந்த இரண்டு போட்டிகளும் டாக்காவில் உள்ள மைதானத்தில் நடைபெறும் என்று பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

5 வீரர்களை ஆசிய 11 அணிகளுக்காக விளையாடுவார்கள் என்று பட்டியலிட்டுள்ளார் கங்குலி. அதில் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா, ஹர்டிக் பாண்டியா முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி விளையாட இருக்கிறார்கள்.

இந்த அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் தோனி மீண்டும் ஆசிய லெவன் அணிக்காக களமிறங்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டி வரும் ஐபிஎல் முன்னதாகவே நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தோனியின் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர், அதுமட்டுமல்லாமல் மூத்த வீரர் என்பதால் இவரே அந்த அணியை தலைமை தாங்கும் வாய்ப்பு உள்ளதாம்.