யாருப்பா இது! என்னை சின்ன வயசுல பார்த்த மாதிரியே இருக்கு.. கிரிக்கெட் வீரரை புகழ்ந்து தள்ளிய சச்சின்

0
674
சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்

உலகமே சச்சினை கிரிக்கெட்டின் கடவுளாக போதித்து வரும் நிலையில் சச்சின் இளம் வீரர் ஒருவரை அவர் உடனேயே கம்பேர் பண்ணி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரை புகழ்ந்து தள்ளியுள்ளது அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியில் மூன்றாவது இடத்தில் விளையாடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் மார்கஸ் லபுசனே. ஏகப்பட்ட திறமை கொண்ட லபுசனே, ஸ்டீவன் ஸ்மித்தை விட சிறப்பாக விளையாடி அனைவர் மனதிலும் இடம் பிடித்துவிட்டார்.

டெஸ்ட் போட்டி பேட்டிங் தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் நுழைந்துள்ளார். இந்நிலையில் அவரை பலரும் ஸ்டீவன் ஸ்மித் உடன் ஒப்பிட்டு வந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் அவரை பெரிதும் பாராட்டியது சச்சின் டெண்டுல்கரின் பெருந்தன்மையை காட்டியுள்ளது.

மேலும் சச்சின் கூறியதாவது, மார்க்கஸ் லபுசனே பந்தை எதிர்கொள்வதற்கு ஏற்றவாறு தனது காலை மிகச் சிறப்பாக உபயோகித்து விளையாடி வருகிறார். அவரின் இந்த கால் நகர்த்துதல் தனக்கு மிகவும் பிடித்ததாகவும், என்னை விட சிறப்பாகவே செயல்படுகிறார் எனவும் அவரை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் இந்த பெருந்தன்மைக்கு பல விளையாட்டு வீரர்களிடமும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.