வசூல் வேட்டையை ஆரம்பிக்க போகிறார் உலக நாயகன்..! அதும் இந்த ஐந்து இளம் நடிகர்களை வைத்தா..! அட இதுல நம்ப ஆளும் இருக்காங்களே..!

0
39
kamal
kamal

actor kamala hassan producing new film using these five famous actors: சமீபத்தில் உலகநாயகன் கமலஹாசன் அவர்களது நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விக்ரம். இத்திரைப்படம் மாபெரும் வெற்றியை கண்டது. இத்திரைப்படத்தின் மூலம் கிடைத்துள்ள லாபத்தை சரியாக பங்கு செய்து உதயநிதி கமலஹாசனிடம் கொடுத்துள்ளார். இதன் காரணமாக தற்பொழுது நடிகர் கமலஹாசன் அவர்களுக்கு படம் தயாரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறாராம்.

தற்பொழுது இருக்கும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களை மட்டுமே தேர்வு செய்து அவர்களை உருவாக்கி வருகிறார். அந்த வகையில் ராஜ்கமல் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் யாரை தேர்வு செய்துள்ளார் என்பதை தற்போது பார்க்கலாம்.

துல்கர் சல்மான்: மலையாள திரை உலகில் மிகவும் புகழ் பெற்றவர் தான் இவர். தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். குறிப்பாக பெண் ரசிகர்கள் இவருக்கு அடிமை என்று கூட கூறலாம். தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்த காரணத்தினால் தற்போது நடிகர் கமல் அவர்களும் இவரை வைத்து ஒரு திரைப்படம் எடுக்க முடிவெடுத்துள்ளாராம்.

அடுத்தபடியாக பகத் பாஸில் : இவர் விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதன் மூலம் நட்பு ஏற்பட்ட காரணத்தினால் இவருக்கும் வாய்ப்பு கொடுப்பதாக நடிகர் கமல் கூறியுள்ளார். அதுவும் துணை நடிகராக அல்ல  முக்கிய கதாபாத்திரம் அதாவது நடிகராக நடிக்க வைக்கப் போகிறாராம்.

சிம்பு : இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மாநாடு. சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அந்த வகையில் தற்பொழுது அவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் வெந்து தணிந்தது நாடு, பத்துதல போன்ற திரைப்படங்கள் ரிலீஸுக்காக வெயிட்டிங்கில் உள்ளது. அடுத்தபடியாக நடிகர் கமல் அவர்களுடன் சிம்பு இணையப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

உதயநிதி ஸ்டாலின்: இவர் கடைசியாக நடித்திருக்கும் நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படம் பல பாராட்டுகளை பெற்று தந்தது. அந்த வகையில் விக்ரம் படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட உதயநிதி அவர்கள் விரைவில் கமலஹாசன் அவர்களுடன் இணைவேன் என்று அவரே தன் வாயால் கூறியுள்ளார்.

கடைசியாக சிவகார்த்திகேயன்: தமிழ் திரை உலகில் வசூல் மன்னனாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். கடைசியாக இவர் நடித்து வெளியான திரைப்படங்கள் டான் மற்றும் டாக்டர். இத்திரைப்படம் 100 கோடி வசூலை எட்டியுள்ளது. பிக் பாஸ் மேடையில்  நடிகர் கமலஹாசன் அவர்கள்  அடுத்த திரைப்படம் உன்னை வைத்து தான் எடுக்கப் போகிறேன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் இடமே கூறினார். அது தற்பொழுது உண்மையாக போகிறது.