தங்க மீன்கள் திரைப்படத்தையே ஓவர் டேக் செய்த பிரபுதேவாவின் பொய்கால் குதிரை..! மக்களின் கருத்து என்ன..!

0
36
prabudeva
prabudeva

actor prabhu deva new film poikkal kuthirai twitter review: நடன இயக்குனர் மற்றும் நடிகரான பிரபுதேவா அவர்களது நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு தான் மை டியர் பூதம் என்ற திரைப்படம் வெளியானது.  அடுத்தபடியாக பிரபுதேவா அவரது நடிப்பில் ஜெயிக்குமார் இயக்கத்தில் அடுத்து வெளியான திரைப்படம் தான் பொய்க்கால் குதிரை.

இத்திரைப்படத்தில் நடிகையாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இக்கதையின் சுருக்கம் என்னவென்றால் தன்னுடைய குழந்தை மருத்துவ செலவிற்காக பிரபல தொழிலதிபர் வரலட்சுமி சரத்குமாரின் குழந்தையை கடத்தும் திட்டம்  தான். இதில் பிரபுதேவா  வெற்றி பெறுவாரா இல்லை தோல்வி அடைவாரா என்பதுதான் இக்கதையின் சுருக்கம்.

மேலும் இத்திரைப்படத்தில் பல சென்டிமென்ட் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அப்பா மகள் சென்டிமென்ட் மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறார்கள் அப்பட குழுவினர்கள். இசையமைப்பாளராக இமான் இசையமைத்துள்ளார்.

மேலும் திரைப்படத்தை பற்றி பல ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். அதாவது பிரபுதேவா அவர்கள் எத்தனையோ தோல்வி படங்கள் நடித்திருந்தாலும் இத்திரைப்படத்தின் மூலம் பல ரசிகர்களிடம் நல்ல பெயரை பெற்றுக்கொண்டார். அதாவது இவர் மாற்றுத்திறனாளியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

movie review1
movie review1

அது மட்டுமல்லாமல் நார்மல் ஆகவே அப்பா மகள் சென்டிமென்ட் என்றால் அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதேபோல இத்திரைப்படத்தின் காட்சிகளும் அமைந்திருப்பதன் காரணத்தினாலும் பலரும் இத்திரைப்படத்தை பாராட்டி வருகிறார்கள். இதோ ரசிகர்கள்  கமெண்ட்ஸ் செய்துள்ளதை நீங்களே பாருங்கள்.

movie review2
movie review2
movie review3
movie review3