கிண்டலுக்கும் கேளிக்கும் ஆளான அஜித் பட நடிகை..! ட்விட்டரை விட்டு அலறி ஓடிய சம்பவம்.

0
43
ajith-sharatha
ajith-sharatha

Ajith film actress who was teased and amused so she ran away from twitter: திரை உலகில் இருக்கும் அனைத்து நடிகைகளும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்கள். அதிலும் பல நடிகைகள் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வது என பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் அஜித் பட நடிகை ஒருவர் தனது பெயரை மாற்றியதனால் நெட்டிசன்கள் தன்னை கிண்டல் செய்ததை தாங்க முடியாமல் அவர் ட்விட்டரை விட்டு ஓடி விட்டாராம். இது குறித்த தகவல் ஆனது தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை மற்றும் மாதவன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விக்ரம் வேதா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை தான் ஷ்ரதா ஸ்ரீநாத்.

தமிழ் சினிமா மட்டும் அல்லாமல் தெலுங்கு கன்னடம் போன்ற பல திரைபடங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். மேலும் தல அஜித் அவர்களுடன் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். தல அஜித் உடன் நடித்த காரணத்தினால் அடுத்தடுத்த திரைப்படங்களில் இவருக்கு நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது.

எல்லா நடிகைகளும் தங்களுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவது வழக்கம். அதேபோலத்தான் இவரும் தன்னுடைய புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் தனது பெயரை மாற்றப் போவதாகவும், அதற்கு பதில் தன்னுடைய அம்மாவின் பெயர் தான் வைப்பதாகவும் ஒரு பதிவை வெளியிட்டார்.

அதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் பலவிதமாக கலாய்க்க ஆரம்பித்தனர். அதாவது ஸ்ரத்தா  என்ற பெயரில் பல நடிகைகள் இருக்காங்க போல அதனாலதான் இவங்க பேர மாத்துறாங்க என கலாய்க்க ஆரம்பித்தனர். இதனைக் கண்ட நடிகை  உங்களுடைய கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி  இனி நாலு மாசத்துக்கு ட்விட்டர் பக்கமே வரமாட்டேன் டா சாமி என பதிவு செய்து ஆவேசமாக வெளிவந்துள்ளார்.

இவர் வெளிவந்த பிறகும் சும்மா விட்டார்களா. அம்மா நீங்க வெளியே போயிட்டீங்கன்னா ட்விட்டருக்கு தான் நஷ்டம் என்று இன்னமும் கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசங்கள்.