ரஜினிக்கு வழி விட்டு ஒதுங்கும் தல அஜித்..! வலிமை பட ரிலீஸ் தேதி இது தான் !

0
305
rajini-ajith-cineseithigal
rajini-ajith-cineseithigal

தல அஜித், வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு தொடங்க இருந்த நேரத்தில் கொரானா பாதிப்பால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதனால் 2020 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வர வேண்டிய வலிமை படம் கண்டிப்பாக தற்போதைக்கு வெளியாக வாய்ப்பில்லை என்ற நிலைமை உருவாகியுள்ளது. அதற்கு தகுந்தாற்போல் தல அஜித்தின் பிறந்த நாளன்று வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கூட வெளியிடாமல் நிறுத்தி விட்டனர்.

அதுமட்டுமல்லாமல் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்புகள் ஜூலை மாதத்திற்கு மேல் தான் தொடங்கும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அஜித்தும் தொழிலாளர்கள் நலன் கருதி ஓகே சொல்லிவிட்டதாக தெரிகிறது.

இதனால் 2021 பொங்கல் வெளியீடாக வெளிவர இருக்கும் ரஜினியின் அண்ணாத்தே படத்துடன் மீண்டும் வலிமை படம் போட்டிப் போடப்போவதாக செய்திகள் வெளியான நிலையில் ரசிகர்கள் தங்களது போட்டிகளை தொடங்கினர்.

ஆனால் தற்போது கிடைத்த தகவல்படி அஜித்தின் வலிமை பட ஜூலை ஆரம்பித்தால் ஜனவரியில் முடிப்பது கஷ்டமாம். அதனால் 2021 ஏப்ரல் ரிலீஸுக்கு சென்றுள்ளது. இதனால் பேட்ட, விஸ்வாசம் படத்திற்கு பிறகு அஜித், ரஜினி படங்கள் மோதும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அப்படி கோடை விடுமுறையில் வலிமை படம் வெளியானால் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் தல அஜித்தின் படம் வெளிவராமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.