மீண்டும் சீரியலில் ராவாக களமிறங்கும் ஆல்யா மானசா..! ஆட்டம் கண்ட விஜய் டிவி..!

0
82
alya-manasa
alya-manasa

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ஒவ்வொரு சீரியல்களிலும் ஒவ்வொரு கதாநாயகிகள் உள்ளார்கள் ஆனால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கதாநாயகி என்றால் அது ஆல்யா மானசா தான்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அது மட்டும் இல்லாமல் இந்த சீரியலில் அவர் நடித்த செண்பா என்ற கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம்.

அந்த வகையில் இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்நிலையில் இவர்கள் திருமணம் முடிந்து தற்போது குழந்தைகளை பெற்றெடுத்து விட்டார்கள் மேலும் குழந்தை பெற்ற பிறகு சீரியலில் முகம் காட்டாமல் இருந்து வந்த நமது நடிகை கணவர் மட்டுமே சீரியலில்  நடித்த வருகிறார்.

அந்த வகையில் சஞ்சீவ் அவர்கள்  சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்த வருகிறார். மேலும் தற்பொழுது ஆலியா மானசா  சீரியலில் நடிக்க ஆரம்பிக்க உள்ளார் ஆகையால் தன்னுடைய உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என்ற காரணத்தினால் உடற்பயிற்சியில் தீவிரம் காட்டி வருகிறாராம்.

அதுமட்டுமில்லாமல் இந்த முறை விஜய் டிவிக்கு டாட்டா காட்டிவிட்டு சன் டிவி பக்கம் களமிறங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது ஆக மொத்தம் விஜய் டிவிக்கு இனிமேல் ஆப்பு தான் என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.