கொரோனாவுக்காக அஞ்சு பைசா கொடுக்க முடியாதா.. நடிகைகளை கிழிக்கும் கேள்விகள்!!!

0
523
actress
actress

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் அனைவரையும் ஆட்டிப் படைத்து வருகிறது. கொரானா வைரஸை ஆரம்பித்த சைனா தற்போது பழைய நிலைமைக்கு வந்தாலும் உலகத்திலுள்ள பல நாடுகள் ஏன் இந்தியா முதற்கொண்டு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரானாவை எதிர்க்க பிரதமர் மோடி நிதி திரட்டி வருகிறார். இந்திய சினிமாவின் அனைத்து நடிகர்களும் தங்களால் முடிந்த அளவு கோடிகளிலும் லட்சங்களிலும் தங்களது நிதியைக் கொடுத்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் தங்களது சினிமா துறையில் வேலை இல்லாமல் தவிக்கும் பலருக்கு தொடர்ந்து பணம் கொடுத்து வருகின்றனர். நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள் கொடுத்தால் என்ன என சிலர் கூறிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

ஆனால் அவர்கள் யாருமே சினிமா நடிகைகள் ஏன் பணம் கொடுக்கவில்லை என ஒரு வார்த்தையாவது கேட்டு இருப்பார்களா? நடிகைகளும் கோடிக்கணக்கில் தான் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் இதுவரை ஒரு நடிகை கூட தங்களது சினிமா தொழிலாளர்களுக்கும் சரி, கொரானா நிதிக்கும் சரி அஞ்சு பைசா தரவில்லை.

10 கோடி 15 கோடி சம்பளம் வாங்கும் பாலிவுட் நடிகைகள் கூட ஒரு பைசா தரவில்லை என்பது கவலைக்குரிய விஷயம். அடிக்கடி டுவிட்டரில் சமூக கருத்துக்களை பேசி கொதித்தெழும் குஷ்பூ, கஸ்தூரி நாட்டுக்காக எவ்வளவு கொடுத்தார்கள்? இனி யாராவது இப்படி சமூகத்தின் மீது அக்கறை கொண்ட மாதிரி சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டால் கண்டிப்பாக நெட்டிசன்கள் சரமாரியாக பதிலடி கொடுத்து விடுவார்கள்.

தினக்கூலிக்கு செல்பவர்கள் கூட தங்களால் முடிந்த அளவு பிரதமருக்கு நிதி கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் நடிகைகளும் தங்களால் முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும். ஆனால் செய்ய மனசுதான் வராது.