லாக்டவுனில் ஊர் சுற்றும் மக்களை செருப்பால் அடிகாத குறையாக பேசிய நர்ஸ்..! இதுக்கு மேலயும் வெளியில போனா அவன் மனுசனே இல்ல..!

0
232
nurse-cineseithigal
nurse-cineseithigal

covid 19 staff speech viral in social media: நாடு முழுவதும் தற்போது கொரோனாவின் தாக்கமானது அதிகரித்துக் கொண்டே வருகிறது இந்நிலையில் இந்த நோய் வயது வித்தியாசம் ஏழை பணக்காரன் என எதையும் பார்க்காமல் அனைவரையும் போட்டு வாட்டி எடுத்து வருகிறது.

இவ்வாறு உருவான இந்த நோய்க்கு தற்போது தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை பல நாடுகளும் எடுத்து வருகிறது இந்நிலையில் இந்தியாவில் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் ஆனது மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இந்த வைரஸால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்  தொடர்ந்து பணி செய்வதன் காரணமாக பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இது காரணமாக தமிழக அரசானது எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தி இருந்தாலும் மக்கள் அதை காதில் வாங்குவது போல் தெரியவில்லை அவர்கள் அலட்சியமாக  தங்கள் குடும்பத்தில் சடங்கு செய்வது திருமணம் செய்வது போன்ற நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இவ்வாறு செய்வதன் காரணமாக யாருக்கு நஷ்டம் என்பதை கொஞ்சம் கூட புரிந்து கொள்ளாமல் பலர் இந்த தவறை செய்து வருகிறார்கள் இப்படி ஒரு நிலையில் செவிலியர் ஒருவர் இந்த வைரஸின் காரணமாக டாக்டர்ஸ் மற்றும் நர்ஸ் எவ்வளவு கஷ்டப் படுகிறார் என்பதை எடுத்துரைத்துள்ளார்.

இவ்வாறு இந்த வீடியோவை பார்த்த நடிகர் மாதவன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார் அதுமட்டுமில்லாமல் எங்களை மன்னியுங்கள் நாங்கள் உங்களுக்கு கடமைப்பட்டு இருக்கிறோம் என அவர்களுடைய கஷ்டத்தை பார்த்து மனம் நொந்து போய் விட்டார்.