சொல்லி வச்சது போல் நம்ம தோனிக்கும் தல அஜித்துக்கும் இவ்ளோ ஒற்றுமையா..! என்னமோ இருக்கே இவங்களுக்குள்ள..!

0
382
ajith-dhoni-cineseithigal
ajith-dhoni-cineseithigal

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கும் கோலிவுட் ஹீரோ அஜித்திற்கும் நிறைய விஷயங்களில் தொடர்பு மற்றும் ஒற்றுமை உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி நேற்று முதல்நாள் தனது இன்ஸ்டா பக்கத்தில் முக்கியமான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். தனது மகள் ஷிவா உடன் அவர் விளையாடும் புகைப்படம் ஆகும் இது.

இதை பார்த்த பலரும் அட இவர் என்ன நடிகர் அஜித் போலவே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு மாறிவிட்டார் என்று கூறினார்கள். பலரும் இவர் அஜித் போலவே இருப்பதாக பேசினார்கள். உருவத்தில் மட்டுமல்ல பல்வேறு விஷயங்களில் இவர்கள் இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது. என்ன ஒற்றுமை என்று இங்கே பார்க்கலாம்.

நடிகர் அஜித்திற்கு, கிரிக்கெட் வீரர் தோனிக்கும் உள்ள முக்கிய தொடர்பு என்றால் அது மகள் மற்றும் குடும்ப செண்டிமெண்ட்தான். அஜித் தனது மகள் அனோஷ்கா மீது அதிக பாசம் கொண்டவர். இவர்களின் கியூட் புகைப்படங்கள் இணையத்தில் எப்போதும் வைரலாகும். அதேபோல் தோனிக்கும். தோனி ஷிவா உடன் விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகும். இவர்களின் க்யூட் அப்பா மக்கள் புகைப்படங்கள் இணையத்தில் இப்போதும் டிரெண்ட்தான்.

இருவருக்கும் விளையாட்டு, சினிமாவை விட குடும்பம்தான் மிக முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருமே குடும்பம் மீது அதிகம் கவனம் செலுத்துவார்கள். தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடவே அதிகம் விரும்புவார்கள். மிக சரியான ஜென்டில்மேன் டைப் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் ஜென்டில்மேன் குணத்தை சக வீரர்கள் நடிகர்களே வியந்து பாராட்டி இருக்கிறார்கள்.

அதேபோல் இரண்டு பேருமே விழாக்கள், பண்டிகைகள் எதிலும் கலந்து கொள்வது கிடையாது. எங்குமே வெளியே சென்றது கிடையாது. குடும்பம், வீடு, வேலை இதுதான் இவர்கள் வேலை. விளையாட்டு விழாக்கள், பேட்டிகள், சினிமா விழாக்கள், அரசு நிகழ்வுகள் என்று எதிலும் இவர்கள் கலந்து கொண்டது கிடையாது. தனிப்பட்ட வாழ்க்கையில் இவர்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

அஜித் மற்றும் தோனி இருவருக்கும் தல என்று பெயர் உள்ளது. இந்த பெயர் காரணமாக அஜித் – தோனி ரசிகர்கள் அவ்வப்போது சண்டை போடுவது வழக்கம். ஆனால் எப்போதுமே அஜித், தோனி இது தொடர்பாக கருத்து தெரிவித்தது இல்லை. அதேபோல் இரண்டு பேரும் தற்போது தோற்றத்திலும் ஒரே மாதிரி சால்ட் அண்ட் பெப்பர் லுக் வைத்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு பேரும் அமைதியாக உதவும் குணம் கொண்டவர்கள். இருவரையும் அரசியலுக்குள் இழுக்க நிறைய கட்சிகள் மிக தீவிரமாக முயன்று வருகிறது . முக்கிய தேசிய கட்சிகள் தீவிரமாக வருகிறது. ஆனால் அஜித் இதற்கு இதுவரை ஓகே சொல்லவில்லை. தோனியும் அரசியல் தொடர்பாக இதுவரை எதுவும் பேசியதில்லை. அரசியலில் இருந்து இருவருமே விலகி இருக்கிறார்கள். இது மிக முக்கியமான ஒற்றுமை ஆகும்.

அதேபோல் இரண்டு பேருக்கும் தீவிர தமிழ் ரசிகர்கள் அதிகம். தமிழகத்தில் இரண்டு தலைக்கும் மிக தீவிரமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அஜித் படத்தின் ஓப்பனிங்கிற்கும், தோனியின் கிளைமேக்ஸ் சிக்ஸிற்கும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பேருமே இதுவரை பெரிதாக எந்த விதமான சர்ச்சையில் சிக்கியது இல்லை.

இதெல்லாம் போக இரண்டு பேருமே தீவிர பைக் விரும்பிகள். இரண்டு பேருமே மாறுவேடம் அணிந்து தமிழ்நாட்டில் பைக் ஒட்டி உள்ளனர். அதேபோல் ஹெலிகாப்டர் தொடங்கி டிரோன் வரை விமானங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள். யாருக்கும் தெரியாத ரகசியம், இரண்டு பேருமே கேம்மர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருமே ஆன்லைன் கேம்களில் தீவிரம் காட்ட கூடியவர்கள்.

இரண்டு பேருமே அவர்கள் துறையில் ஜாம்பவான்கள் இருந்த சமயத்தில் உள்ளே வந்து அவர்களை இடம்மாற்றி அங்கே அமர்ந்து கொடி நாட்டியவர்கள். நான் அடிச்ச 10 பேருமே டான்தான் .. என்று கேஜிஎப் படத்தில் வரும் வசனம் போல இவர்கள் சுயமாக முன்னேறியவர்கள். இவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிய பின்புலம் இல்லை. தன்னம்பிக்கை, அடக்கம் ஆகியவை மட்டுமே தோனி மற்றும் அஜித்தின் வெற்றிக்கு காரணம் ஆகும்.