நடிகை பிந்து மாதவி முதன் முதலில் என்ன வேலை செய்து கொண்டு இருந்தார் தெரியுமா..! அதும் வெறும் 5000 ரூபாய்க்கா..! அப்படி என்ன வேலை?

0
196
bindu-mathavi-cineseithigal
bindu-mathavi-cineseithigal

Do you know what actress Bindu Madhavi was doing in the first place: தமிழ் சினிமாவில் பொக்கிஷம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருப்பவர்தான் நடிகை பிந்து மாதவி. இத்திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் சட்டம் ஒரு இருட்டறை, கழுகு என பல திரைப்படங்களில் நடித்து ஹிட்டான திரைப்படங்களையும் கொடுத்திருக்கிறார்.

இத்திரைப்படத்திற்கு பிறகுதான் இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரையும் தனக்கான வரவேற்பையும் பெற்று கொண்டார். பிரபலம் அடைந்த நடிகை பிந்துமாதவி அவர்களுக்கு தொடர்ச்சியாக அடுத்ததாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தது.

அந்த வகையில்தான் கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என திரைபடத்தில் துணை கதாநாயகியாக  பலதிரைப்படங்களில் நடித்திருக்கிறார்.தமிழில் பிரபலமாக்கிய நடிகை பிந்து மாதவி அவர்களுக்கு தெலுங்கு மொழியிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இப்படி பிரபலமான நடிகை சினிமா உலகிற்கு வருவதற்கு முன்னாடி என்ன வேலை செய்து கொண்டிருந்தார் என்று தெரியுமா.இவர் திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்பு பல கஷ்டங்களை சந்தித்துள்ளார்.

இவர் நடிக்க வருவதற்கு முன்பாக சரவணா ஸ்டோர்ஸ் கடையில் வெறும் 5,000 ரூபாய்க்கு வேலை பார்த்தாராம். இது உங்களால் நம்ப முடிகிறதா. இவர் வேலூரில் விஐடி கல்லூரியில் படித்து உள்ளார். அப்பொழுது தான் அங்கு உள்ள சரவணா ஸ்டோரில் போட்டோ மாடலிங்காக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.  இதனை பார்த்த பிந்து மாதவி அதில் சிறிது காலம்  பணியாற்றியிருக்கிறார்.

அதன்பிறகு டாடா கோல்ட் டி என்ற விளம்பரத்திலும் நடித்திருக்கிறார் நடிகை பிந்து மாதவி. விளம்பரங்களை தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய இவருக்கு இயக்குனர் ஒருவர் திரைப்பட வாய்ப்பு கொடுத்துள்ளார். ஆனால் இவர் திரைப்படங்களில் நடிப்பது இவருடைய தந்தைக்கு பிடிக்கவில்லையாம்.

bindhu-mathavi-cineseithigal
bindhu-mathavi-cineseithigal

தந்தைக்கும் இவருக்கும் பல போராட்டங்கள்.  இவருடைய தந்தை அவரிடம் 8 மாதங்களுக்கும் மேலாக பேசவில்லையாம்.  இருந்தாலும் நடிப்பின் மீது ஆசை கொண்ட நடிகை பிந்து மாதவி விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்து படிப்படியாக முன்னேறி தற்போது பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது இரண்டு திரைப்படங்களை கைவசமாக வைத்துள்ளார் நடிகை பிந்து மாதவி. இவருடைய வாழ்க்கையில் இப்படி ஒரு சோதனையா? என்று ரசிகர்கள் தங்களுடைய வேதனையை தெரிவித்து வருகிறார்கள்.

bindhu-mathavi1-cineseithigal
bindhu-mathavi1-cineseithigal