மறைந்த முன்னால் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் பக்கத்தில் இருக்கும் அந்த நடிகை யார் என்று தெரியுமா..?

0
131
vj-ramya
vj-ramya

Do you know who is the actress who is on the side of the late former First Minister Jayalalithaa: பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பல தொகுப்பாளினிகள் ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் தான் தொகுப்பாளினி ரம்யா சுப்ரமணியன்.

இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையும் ஆவார். மேலும் மிஸ் சென்னை என்ற போட்டியிலும் நடிகை ரம்யா பங்கேற்று உள்ளார். அந்த வகையில் ஒரு சில திரைப்படங்களிலும் துணை நடிகையாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு பெயரை பெற்றுக் கொண்டார் நடிகை ரம்யா.

அந்த வகையில் பிரபல இயக்குனரான மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் அவர்களுக்கு நண்பராக நடித்து இருப்பார். இதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வந்தார் நடிகை ரம்யா.

vj-ramya-cineseithigal
vj-ramya-cineseithigal

இவருடைய அப்பா தமிழ்நாட்டில் முன்னாள் அட்வகேட் ஜெனரல்  என்று கூறினார். மேலும் இவர் ஓய்வு பெறும் போது முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா அம்மா அவர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

vj-ramya1-cineseithigal
vj-ramya1-cineseithigal

அந்த புகைப்படம் எடுக்கும் பொழுது நான் இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஜெயலலிதா அம்மா என்னை மடியில் தூக்கி வைத்து கொஞ்சி விளையாடி எனக்கு காபி கொடுத்தார். மிகவும் சந்தோசமாக இருந்த தருணத்தை தற்போது தன்னுடைய சமூக வலைத்தளத்தில் நான் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

vj-ramya2-cineseithigal
vj-ramya2-cineseithigal