உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படம் தான் விக்ரம். இத்திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 3ஆம் தேதி வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.
கடந்த சில வருடங்களாக நடிகர் கமலஹாசன் அவர்களது நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை. இதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த இத்திரைப்படம் தான் விக்ரம். அதே போல இத்திரைப்படமும் மாபெரும் வெற்றியை கொடுத்தது.
இத்திரைப்படத்தை ராஜ் கமல் ஃபிலிம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு மட்டும் ரூபாய் 120 முதல் ரூபாய் 150 கோடி வரையிலான பட்ஜெட் கொண்டு உருவாக்கியதாம். ஆனால் இத்திரைப்படத்தின் வசூலானதோ ரூபாய் 442 கோடி மேல் வசூல் செய்யப்பட்டது என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
தற்பொழுது வரை இன்னும் திரைப்படம் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு தான் வருகிறது. தமிழ் திரையுலகை தாண்டி தெலுங்கு மலையாளம் ஹிந்தி என பிற மொழிகளிலும் இப்படம் வெளியானது. பிற மொழிகளிலும் கூட இந்தத் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
இன்னும் முக்கியமான தகவல் என்னவென்றால் ஆந்திர மாநிலத்தில் மட்டும் வெறும் 50 நாட்களில் மட்டுமே ரூபாய் 18 கோடி வரை ஷேர் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இன்னும் இத்திரைப்படம் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதன் காரணத்தினால் மேலும் வசூல் செய்யப்படும் என்று கூறப்பட்டு வருகிறது.