மீண்டும் ஒன்று சேர்ந்த பொன்னியின் செல்வன் பட குழுவினர்கள்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

0
94
ponniyin-selvan
ponniyin-selvan

ponniyin selvan team watched movie in theater image goes viral: பிரபல இயக்குனரான மணிரத்தினம் அவர்களது இயக்கத்தில் பல நாள் கனவை படமாக எடுக்கப்பட்ட திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். திரைப்படம் கடந்த 30ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது.

மிகச் சிறந்த நாவலாக போற்றப்படும் பொன்னியின் செல்வன் எப்படியாவது திரைப்படமாக எடுக்க வேண்டும் என்ற  ஆசை பல இயக்குனர்களுக்கு இருந்துள்ளது. அதை வெற்றிகரமாக இயக்குனர் மணிரத்தினம் சாதித்து காட்டியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இத்திரைப்படத்திற்காக தாய்லாந்து, பாண்டிச்சேரி, மும்பை, ஹைதராபாத், தமிழ்நாடு என பல்வேறு இடங்களில் படப்பிடிப்புகள் நடந்திருக்கிறது. சில காலங்களுக்கு முன்பு கொரோனாவால் படப்பிடிப்பு இடங்களும் சற்று மாற்றப்பட்டன.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ரசிகர்கள் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து பிரபாகங்களும்  ஒன்றாக அமர்ந்து திரைப்படத்தை பார்த்துள்ளனர்.

உலக அழகி ஐஸ்வர்யா ராய் அவர்களும் தனது மகளுடன் சென்னைக்கு வந்து திரைப்படத்தை தனது பட குழுவினர்களுடன் பார்த்து உள்ளார். இவர்கள் எடுத்துக் கொண்ட பல புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி மிகவும் வைரலாக வளம் வருகிறது.

இதோ அந்தப் புகைப்படம்.