Rajinikanth : ”ரஜினிகாந்த் போட்ட கண்டிசன், கிடுகிடுத்து போன லைகா”

Laal-Salaam
Laal-Salaam

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கி வெளியாகயுள்ள ”லால் சலாம்” படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில்  ரஜினிகாந்த் சிறப்பு  தோற்றத்தில் நடித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதை தொடர்ந்து அடுத்த கட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

லைக்கா நிறுவனம் தயாரித்து வெளியான ”ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினிகாந்த் மோகன்லால், சிவராஜ்குமார்,  ரம்யா கிருஷ்ணன்,  வசந்த் ரவி,  விநாயகன் உள்ளிட்டவர்கள் நடித்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்த நிலையில் ரூ600 கோடிகளுக்கு மேலாக உலகையே வசூலில் திரும்பிப் பார்க்க வைத்தது. வசூலில் வாரி குவித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதில் பணிபுரிந்த  ரஜினி,  நெல்சன் அனிருத் என ஒட்டுமொத்த படக்குழுவினருக்கு பரிசுகளை வாரி வழங்கியது.

இதைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்த கட்டமாக தனது அடுத்த படம் குறித்து அறிவித்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் ”தலைவர் 171” படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார்.வருகின்ற ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்புத் தொடங்கி தீபாவளி அன்று திரைக்கு வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியின் ஆசை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் நிறைவேற உள்ளது.

”லால் சலாம்” படத்தில் ரஜினியின் கண்டிஷன்: இந்த படத்தில் கேமியா ரோலில் நடிக்க ரஜினிகாந்த் தனக்கு சம்பளம் வேண்டாம் என்று லைக்கா நிறுவனத்திற்கு புதிய கண்டிஷனை போட்டுயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அதாவது நான் ”லால் சலாம்” படத்திற்கு சம்பளம் வேண்டாம்,  ஆனால் படம் ஓடிய பிறகு லாபம் அடைந்தால் அதில் சரி பங்கு வேண்டும் என்று கேட்டு இருக்கிறாராம். இதைக் கேட்ட லைக்கா ஆடிப் போய் உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இதில் உண்மை எந்த அளவிற்கு என்று தெரியவில்லை.