சமந்தாவை பார்த்து தேம்பித் தேம்பி அழுத வீடியோ.. இப்படி பண்ணிட்டீங்களே மேடம்!

0
299
samantha
samantha

தமிழில் விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் 96. பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்களாக காதலிக்கும் விஜய் சேதுபதி திரிஷா மீண்டும் பல ஆண்டுகள் கழித்து ஒன்று சேர்வதே படத்தின் கதை.

இதில் பள்ளி காலத்து காதல் மற்றும் வயது ஆன பிறகு ஏற்படும் திரிஷா விஜய் சேதுபதியின் காதல் இரண்டுமே அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கும். இப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

தமிழில் இயக்கிய பிரேம் குமாரேதெலுங்கிலும் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜானு என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகி தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி வேடத்தில் ஷர்வானந்த்தும், த்ரிஷா வேடத்தில் சமந்தாவும் நடித்து உள்ளனர். ஜானு படத்தை பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர் தேம்பித் தேம்பி அழுத வீடியோ காட்சி அவரது பள்ளிப் பருவக் காதலை நினைவுபடுத்துவது போல் உள்ளதாம். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது.