schools reopen and admission update: நாடு முழுவதும் கொரானா காரணமாக அனைத்து துறைகளும் முடங்கி கிடக்கிறது. அந்த வகையில் அதில் முக்கியமானவை என்னவென்றால் அது கல்வி தான்.
தற்போது தான் கொரானாவின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் பள்ளி கல்லூரிகளுக்கு மட்டுமே ஐந்து மாதங்களுக்கும் மேல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு தான் பிளஸ் 2 தேர்வின் முடிவுகள் வெளியாகின. இதற்கு துவக்கமாக தற்போது கல்லூரிகளில் சேர்க்கை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக சில மாதங்களுக்கு முன்புதான் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என மத்திய அரசு ஆலோசனை செய்து வந்ததாக தகவல் வெளியாகின. இதனால் மூடப்பட்டுள்ள பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என மத்திய அரசு கருத்து கேட்டுள்ளது.
இதனால் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் இந்த மூன்று மாதங்களில் எப்போதுதான் பள்ளிகளை திறக்க வேண்டும் என மனிதவள அமைச்சருக்கு ஈமெயில் மூலம் எங்களுக்கு நாளைக்குள் தகவல்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினார்கள்.