தனது மகளுடன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்க வந்த ஷாலினி அஜித்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

0
82
ajith-shalini
ajith-shalini

Shalini Ajith came to watch Ponni’s Selvan in theaters with her daughter: கடந்த மாதம் இறுதியில் அதாவது 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியிடப்பட்ட திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். மிகவும் பிரம்மாண்டமான படைப்புகளில் ஒன்றான இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்து மாபெரும் வரவேற்பை பெற்றுக் கொண்டு வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது இரண்டு நாட்கள் முடிவில் இதுவரை ரூபாய் 150 கோடி வசூல் தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை இயக்கிய மணிரத்தினம் அவர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய சாதனை என்று பலரும் இவரை பாராட்டி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இத்திரைப்படத்தை பல பிரபலங்கள் திரையரங்குகளில் காண வேண்டும் என்பதற்காக பலரும் தங்களுடைய குடும்பத்தோடு அப்படத்தினை திரையரங்குகளில் கண்டு மகிழ்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் மிகவும் பிரபலமான நடிகர்கள் ஒருவரான தல அஜித் அவர்களின் மனைவியான ஷாலினி அஜித் அவர்கள் தனது மகளுடன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை காண திரையரங்கிற்கு சென்றுள்ளார்.

அங்கு ரசிகர்களால் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகிய மிகவும் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

இதோ அந்த வீடியோ.