வித்தியாசமாக சுறா புட்டு செய்வது எப்படி..!!!!

0
556
suraputtu-cineseithigal
suraputtu-cineseithigal

முதலில் மீனை வேக வைத்து, முள் நீக்கி உதிர்த்து வைத்துக் கொள்ளவும். பின்பு வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தொடர்ந்து பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பச்சை மிளகாயை வட்ட வடிவத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

அதன்பிறகு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

வதக்கியதும் மீனைப் போட்டு, உப்பு சேர்த்துக் கிளறவும். மேலும் மஞ்சள்தூள், போட்டு மிதமான தீயில் வைத்து மொறு மொறுப்பாக வதக்கி, தேங்காய்த்துறுவல் போட்டு நன்றாக வதங்கியதும் இறக்கி பரிமாறி கொள்ளவும்.