ஷூட்டிங் ஸ்பார்ட்டில் போலீஸ் உடையில் கிரிக்கெட்டில் பொளந்து கட்டிய தல அஜித்..! வைரலாகும் புகைப்படம் இதோ.!

0
321
thalan ajith-cineseithigal
thalan ajith-cineseithigal

thala ajith playing cricket in shooting sprat : தமிழ் சினிமாவில் மிக உச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர்தான் நம்ம “தல அஜித்”. மேலும்,இவரை திரையுலகம் அல்டிமேட் ஸ்டார் என்று தான் அழைப்பார்கள். இவர் நடிப்பில் மட்டும் இல்லாமல் பல துறைகளில் சாதனை புரிந்து வருகிறார். நம்ம தல அஜித் அவர்கள் சினிமா துறையில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.

அதிலும் இந்த வருடம் வெளிவந்த நேர்கொண்டபார்வை ,விஸ்வாசம் படம் பட்டையை கிளப்பியது என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு மெகா ஹிட் படங்களாக அமைந்தது. இதனை தொடர்ந்து அஜித் அவர்கள் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

அஜித் குமார் அவர்கள் நடிப்பில் மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி சாதனை புரிந்தும் வருகிறார். அஜித் அவர்கள் இளம் வயதிலேயே கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் உடையவர். அது மட்டும் இல்லைங்க கார் மற்றும் பைக் ரேஸ் சம்பந்தமான பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார். அதோடு பறக்கும் ட்ரோன்களை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

thalan ajith-cineseithigal
thalan ajith-cineseithigal

மேலும், இந்த ட்ரோன் குழு சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் அடுத்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் கூட கலந்து கொண்டு இருந்தார்.அஜித் நடிப்பில் மட்டுமில்லாமல் கார் ரேஸ், பைக் ரேஸ், போட்டோகிராஃபர், மெக்கானிக், யுஏவி சிஸ்டம் அட்வைசர், ஹெலிகாப்டர் பைலட் ட்ரைனர் என பலதுறைகளில் சாதனை புரிந்து வருகிறார்.

மேலும், இது சம்மந்தபட்ட பல புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் கூட சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. ஆனால், அஜித்துக்கு கிரிக்கெட் மீது கூட ஆர்வம் இருக்கிறது என்று தற்போது தான் தெரியவந்துள்ளது. அஜித் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா படம் மாபெரும் வெற்றிபெற்றது.

thalan ajith-cineseithigal
thalan ajith-cineseithigal

அஜித்தின் 50 வது படமான இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். பொதுவாக வெங்கட் பிரபு டீம் என்றாலே அது ஷூட்டிங் ஸ்பாட்டில் படு ஜாலியான டீமாக தான் இருக்கும். இந்த நிலையில் மங்காத்தா படப்பிடிப்பில் போலீஸ் உடையுடுன் அஜித் பௌலிங் போட்டும் பேட்டிங் ஆடியும் அசத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.