தளபதி 67ன் படபிடிப்பு ஷூட்டிங் எங்கே தெரியுமா..? அப்டேட்டை வெளியிட்ட லோகேஷ்..!

0
34
vijay-lokesh
vijay-lokesh

thalapathy 67 shooting spot image goes viral: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்துவரும் நடிகர் தான் தளபதி விஜய். இவர் தற்பொழுது இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இத்திரைப்படத்திம் எப்பொழுது வெளியாகும் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் நமது ரசிகர்கள். மேலும் இத்திரைப்படத்தின் அப்டேட்  நாளைக்கு நாள் வெளியாகி கொண்டு வருகிறது. அந்த வகையில் கூட சமீபத்தில் இத் திரைப்படத்திற்கான ஷூட்டிங்கில் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது.

thalapathy 67
thalapathy 67

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களது இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்திலும் தளபதி விஜய் அவர்கள் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இத்திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை.

லோகேஷ் கனகராஜ் அவர்கள் எங்கு சென்றாலும் நமது ரசிகர்கள் ஆவலுடன் கேட்கும் ஒரே கேள்வி நீங்கள் எப்பொழுது அடுத்த திரைப்படம் தளபதி விஜய் உடன் எடுக்க போகிறீர்கள் என்றுதான். அதற்கு விரைவில் விரைவில் என்ற ஒரே பதிலை கூறிவந்த லோகேஷ் கனகராஜ் தற்பொழுது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு தகவல் கூறியுள்ளார்.

அவர் தனது வாயால் சொல்லாமல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்பட வைத்துள்ளார். அதாவது தளபதி 67 திரைப்படத்திற்காக எந்த லொகேஷன் சூட்டாகும் என்ற தேடலில் ஈடுபட்டுள்ளாராம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.  அந்த வகையில் மும்பையில் விரார் என்ற பகுதியில் பணியை தொடங்கி இருப்பதாகவும் அதற்கான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இதோ அந்த புகைப்படம்.

thalapathi 67
thalapathi 67