உலக நாடுகளில் தலைசிறந்த ‘டுவென்டி-20’ அணியாக மக்கள் தேர்வு செய்த அணி இதுவா????

0
611
kholi cineseithigal
kholi cineseithigal

உலகின் சிறந்த ‘டுவென்டி-20’ அணியை தேர்வு செய்யுமாறு ஐ.சி.சி., ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) அதிகாரப்பூர்வ ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் நேற்று ரசிகர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. இதற்காக இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டியின் போட்டோவை வெளியிட்டது.

இதன்படி, ‘ரசிகர்களே உங்கள் காலத்தில் விளையாடிய வீரர்களைக் கொண்டு 11 பேர் கொண்ட சிறந்த ‘டுவென்டி-20′ அணியை தேர்வு செய்யுங்கள். அதேநேரம் ஒரு அணியில் இருந்து ஒருவர் மட்டுமே இடம் பெற வேண்டும்,’ என கேட்டுக்கொண்டது.

பெரும்பாலான ரசிகர்கள் இந்தியாவில் இருந்து கோஹ்லியை தேர்வு செய்து, கேப்டனாகவும் நியமித்தனர். ஒருசிலர் ரோகித் சர்மாவை தேர்வு செய்தனர். ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், பாகிஸ்தானில் பாபர் ஆசம், தென் ஆப்ரிக்காவில் டிவிலியர்ஸ், இலங்கை அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா என பலரும் ஒரே வீரர்களை தேர்வு செய்திருந்தனர்.

தவிர, ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், நியூசிலாந்தின் டிரன்ட் பவுல்ட் உள்ளிட்டோரையும் ரசிகர்கள் பட்டியலில் சேர்த்தனர்.