துணை நடிகைகளிடமும் தங்களது கை வரிசையை காட்டும் இயக்குனர்கள்..! இந்த கொடுமை யாருக்கும் வர கூடாது..!

0
72
actress
actress

The directors show their hand to supporting actresses too: தமிழ் சினிமாவில் இருக்கும் பல நடிகைகள் பல அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற கட்டாயத்தில் தள்ளப்படுகிறார்கள். அதேபோலத்தான் துணை நடிகைகளுக்கும். மேலும் சினிமாவில் நுழைவதற்கு முக்கியமானது அட்ஜஸ்ட்மென்ட் தான்.

நாம் பல பெயரை கவனிக்க வேண்டியதிருக்கிறது.  அதாவது ஒரு திரைப்படத்தில் நடிகையாக வேண்டும் என்றால் அதில் கேமராமேன்,துணை நடிகர் என அனைவரையும் கவனித்தால் மட்டுமே நமக்கு அடுத்த திரைப்படத்திற்கு துணை நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அப்படி இதற்கெல்லாம் ஒத்து வரவில்லை என்றால் துணை நடிகைகள் கூட வாய்ப்பைக் கொடுக்க மாட்டார்களாம். துணை நடிகைகளுக்கு ஒரு ஏஜென்ட்இருப்பார்கள். அவர்கள் மூலம் தான் துணை நடிகைகளை தேர்வு செய்து அத்துமீறல்கள் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

துணை நடிகைகளுக்கு மூன்று பிரிவுகள் உள்ளதாம். அதாவது முதல் பிரிவில் திருமண வரவேற்பு விழாவில் வரவேற்பு பெண்ணாக நடிக்க வைப்பார்களாம் அந்த மாதிரிதான் நடிகைகளை நடிக்க வைத்து தேர்வு செய்வார்களாம். அது மட்டுமல்லாமல் திரைப்படத்தை இயக்கும் இயக்குனர்கள் கூட அவர்களை மதிக்க மாட்டார்களாம்.

துணை நடிகையாக வரும் பெண்களிடம் இயக்குனருக்கு பிடித்து விட்டால் அவர்கள் ஏஜென்ட் மூலம் கூறி அந்தப் பெண்ணை அட்ஜஸ்ட் செய்ய சொல்வார்களாம். படப்பிடிப்பு முடிந்தாலும் பத்து மணி வரை அவர்களுடன் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்களாம்.

10 மணிக்கு மேல் பஸ் வசதி எங்கு உள்ளது நீங்களே சொல்லுங்கள். அப்படி இப்படி என முட்டி மோதிக்கொண்டு 12 மணி அளவில் வீட்டுக்கு போய் சேர்ந்தால் அக்கம் பக்கத்தில் மிகவும் கேவலமாக பேசுவார்கள். துணை நடிகைகளுக்கு ஒரு முக்கியத்துவம் கொடுப்பதே கிடையாது. அட்லீஸ்ட் தங்கும் வசதியாவது செய்து கொடுக்கலாம். ஆனால் அதையும் செய்து கொடுப்பதில்லை.

இது போன்ற அவலம் தான் சினிமா துறையில் நடந்து கொண்டு வருகிறது என பிரபல யூட்யூப் சேனலில்  சினிமா பிரபலம் ஒருவர்  இக்கருத்தினை கூறியுள்ளார்.