நடிகர் ஷாருகானுக்கு முத்தம் கொடுத்த தீபிகா படுகோனே..,,

jawan
jawan

Jawan : வசூலில் மன்னனாக வசூலித்து வரும் இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் வெளியான ”ஜவான்” திரைப்படம் ரசிகர்களுக்கு இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் ஷாருகான்,  விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே ஆகியோர் நடித்து வெளியான இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கோலிவுட் முதல் பாலிவுட் வரை ”ஜவான்” திரைப்படம் உலகம் முழுவதும் வசூலில் தற்போது வரை 700 கோடியை எட்டியுள்ளது. இந்நிலையில் ”ஜவான்” படக் குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பை மும்பையில் நடத்தினர். நன்றி சொல்லும் விதமாக செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ஷாருக்கான்,  தீபிகா படுகோனே, அனிருத், அட்லீ என பலர் கலந்து கொண்டனர்.

இதில் ஷாருகான், இத்திரைப்படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார். ”ஜவான்” வெற்றிக்காக  தீபிகா படுகோனே ஷாருக்கானை கட்டியணைத்து சர்ப்ரைஸ் ஆக முத்தம் கொடுத்து அசத்தினார். ஷாருக்கானுக்கு முத்தம் கொடுப்பது இது முதல் முறையல்ல… இவர்களின் படம் வெற்றி விழாவின் போது தனது அன்பு முத்தத்தை பலமுறை பகிர்ந்துள்ளார். இதில் ஷாருக்கான்,  அட்லீ உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்து வாழ்த்தியுள்ளார்.