வாய்கிழிய பேசியது எல்லாம் பொய்யா..? சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் தன் வேலையை போட்டுக் காட்டிய பா.ரஞ்சித்..!

0
7186
rajini-cineseithigal
rajini-cineseithigal

rajini and pa vijay latest news: தமிழ் திரையுலகிலே முதல் முதலாக சூப்பர் ஸ்டாரை வெறுக்கும் அளவிற்கு திரைப்படம் எடுத்த இயக்குனர் தான் பா.ரஞ்சித். என்னதான் இவர் எடுத்த கபாலி மற்றும் காலா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தாலும் ரசிகர்கள் வெறுக்கும் படி தான் இந்த திரைப்படம் அமைந்தது.

ஆனால் இவர் எடுத்த இரண்டு திரைப்படங்களும் அடித்தள மக்களின் வாழ்க்கையை உணர்த்திய படமாக இருந்தது. இதனால் கபாலி திரைப்படம் வெளிவந்து நான்கு ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் கொண்டாடி வந்தார்கள்.

ஆனால் இதைப் பற்றி இந்த திரைப்படத்தை இயக்கியவர் ரஞ்சித் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்து மதத்தை இழிவு படுத்தி பேசிய கருப்பர் கூட்டம் ஒழிய வேண்டும் என ஆவேசத்துடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

ஏனெனில் கருப்பர் கூட்டத்தில் மறைந்திருந்து வேலை பார்க்கும் ஒருவராக பா ரஞ்சித்தும் ஒருவர் என கூறப்படுகிறார் மேலும் சமூக வலைத்தளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் இவர் பலமுறை அரசியல் கருத்துக்களை கூரி பல்பு வாங்கி உள்ளார்.

இதைதொடர்ந்து சமீபத்தில்கூட ராஜராஜசோழன் பற்றி எதிர்மறையான கருத்து தெரிவித்து சிக்கித் தவித்தார் என்பது அனைவருக்குமே தெரியும். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க எங்கேயோ கிடந்த ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்த ரஜினிகாந்தின் படத்தை வாழ்த்த கூட அவர்களின் சாதி கண்ணை மறைக்கிறது..!

ஆனால் சாதியை ஒழிப்போம் சாதிவெறியை ஒழிப்போம் என வாய்கிழிய பேசியதெல்லாம் பொய்யா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.