பல வருடங்களாக நடிகை கனகாவின் வீட்டிற்குள் நடக்கும் மர்மம்..! பேட்டியில் பகீர் கிளப்பிய உதவியாளர்..!

kanaga karakattakaran
kanaga karakattakaran

தமிழ் சினிமாவில் 1989 ஆம் ஆண்டு ராமராஜன் மற்றும் கனகா ஆகிய இருவரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் கரகாட்டக்காரன் இந்த திரைப்படத்தின் மூலம் பற்றி தொட்டி எங்கும் இவர்கள் இருவருமே பிரபலமானது மட்டுமில்லாமல் கனகா இந்த திரைப்படத்தின் மூலம் தான் சிறந்த கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து நடிகை கனகாவுக்கு வெற்றி திரைப்படமாக திகழ்ந்தது விரலுக்கேத்த வீக்கம் அதே போல கிட்டத்தட்ட 10 வருடங்களாக தமிழ் சினிமாவில் மிகவும் சிறப்பாக பணியாற்றிய நடிகை கனகா உண்மையான பெயர் என்னவென்றால் லட்சுமி பிரியா என்பதாகும் மேலும் திரைக்கு எடுப்பாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் தன்னுடைய பெயரை கனகா என மாற்றிக் கொண்டார்.

இவ்வாறு சினிமாவில் பிரபலமாக இருந்து வந்த நடிகை கனகா முத்துக்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேலும் திருமணம் ஆன இரண்டு வாரங்கள் இல்லையே கனகாவின் கணவர் அவரை விட்டுச் சென்று விட்டார் அதன் பிறகு திரைப்படத்தில் நடிக்காமல் இருந்தது மட்டுமில்லாமல் மீடியா பக்கம் முகம் காட்டாமல் மறைந்து வாழ்ந்து வந்தார்.

இவ்வாறு கணவர் விட்டுச்சென்ற பிறகு 2000-ம் ஆண்டு இரண்டு மலையாள திரைப்படம் மற்றும் 2006 ஆம் ஆண்டு சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் கனகாவின் கணவரைப் போல தான் கனகாவின் தந்தை யாரும் சிறு வயதிலேயே குடும்பத்தை விட்டு அவர் சென்று விட்டார்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் நடிகை கனகாவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு விட்டது அப்பொழுது கனகா அவர்கள் பூஜை அறையில் விளக்கு ஏற்றும் பொழுது துணியில் தீ பட்டு வீடு எரிய ஆரம்பித்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றுள்ளார்கள் அப்பொழுது கனகா யாரையும் உள்ளே வர வேண்டாம் என்று கூறிய கதவை அடைத்து விட்டார் ஆனால் கனகாவை காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்தினால் தீயணைப்பு வீரர்கள் கனகாவை மீது அவருடைய வீட்டிற்குள் சென்றார்கள்.

kanaga karakattakaran
kanaga karakattakaran

அப்பொழுது அவருடைய வீட்டை பார்க்கும் பொழுது மூட்டை மூட்டையாக துணி என பெருநாளாக குடி இருக்காமல் இருந்த  வீடு போன்று இருந்தது. ஏன் கனகா இப்படிப்பட்ட இடத்தில் இருக்கிறார் என்பது குறித்து பல்வேறு மர்மங்கள்  மற்றும் கேள்விகள் எழுந்து வருகிறது இந்நிலையில் இதற்கு முக்கிய காரணம் கனகாவுக்கு ஞாபக மறதி என்று கூறுவது மட்டுமில்லாமல் சிலரின் செய்கையால்தான் அவர் இப்படி இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.

இதற்கிடையே கனகாவின் உதவியாளரிடம் இது குறித்து கேட்கும் பொழுது அவருக்கு என்ன தேவையோ அவை அனைத்தையும் நான் வாங்கிக் கொடுப்பேன் அவரை பார்த்துக்கொள்வேன் மேலும் அவர் நன்றாக தான் இருக்கிறார் அவருக்கு ஏதும் பிரச்சினை கிடையாது அவருக்கு என்ன வேண்டுமானாலும் நான் செய்து தருவேன் என்று அவர் கூறி முடித்துவிட்டார் இவ்வாறு அவர் கூறிய வார்த்தையை பார்த்த ரசிகர்கள் இன்னும் சில மர்மங்கள் இதில் உள்ளது என்று ஆவலுடன் அதை தெரிந்து கொள்ள காத்துக் கொண்டிருக்கிறார்கள்.