2007 ஆம் ஆண்டு யுவராஜ் சிங் ஒரே ஓவரில் அடித்த 6 சிக்சர்களை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அதில் 12 பந்துகளில் அரை சதம் விளாசிய சாதனை இன்றுவரை முறியடிக்க முடியவில்லை.
இந்த ஓவருக்கு முன்னால் ஆன்ட்ரு பிலின்டாப் யுவராஜ் சிங்குடன் பெரிய வார்த்தை சண்டையில் ஈடுபட்டார். தற்போது அந்த நேரத்தில் என்ன நடந்தது என்று யுவராஜ் சிங் கெவின் பீட்டர்சனிடம் இன்ஸ்டாகிராம் நேரலையில் தெரிவித்துள்ளார்.
முதலில் பிலின்டாப் எனக்கு ஓவர் வீசும்போது நன்றாக வீசிக் கொண்டிருந்தார். அதில் ஒரு நல்ல யார்க்கர் பந்தை நான் பவுண்டரிக்கு அனுப்பினேன். நான் அடித்த அந்த ஷாட்டினை பார்த்த அவர் மோசமான ஷாட் என்று கூறினார். மேலும் எனது தொண்டையை அருப்பேன் எனவும் கூறினார்.
மேலும் என்னை பார்த்து முணுமுணுத்துக்கொண்டே இருந்தார். இதனால் எனக்கு சற்றே கோவம் அதிகரித்தது. நான் அவரிடமே நேரடியாக பதிலளிக்க எண்ணி நான் என் கையில் பேட் இருக்கிறது நானும் செய்வேன் என்று பதிலளித்தேன்.
மேலும் நீங்கள் அடுத்து வீசப்போகிற உங்கள் பந்துகள் எங்கெல்லாம் எங்கே பறக்கப்போகிறது என்று பாருங்கள் என்று ஆக்ரோஷமாக பேசினேன் . அதன்பின்னர் பிராடை 6 சிக்சர்கள் விளாசி விட்டு செம கடுப்பில் இருந்தேன்.
அதற்கு முந்தைய ஒருநாள் தொடரில் மஸ்கர்னாஸ் எனது பந்தை ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் அடித்தார். அதனால் 6 சிக்ஸர்கள் அடித்தவுடன் முதலில் மஸ்கர்னாசை பார்த்தேன் அதன்பின்னரே பிளிண்டாப்பை பார்த்தேன். அப்போதும் எனது கோவம் தணியவில்லை என்று எனக்கு நியாபகம் இருப்பதாக யுவ்ராஜ் கூறியது குறிப்பிடத்தக்கது.