இம்பால்:
இந்தியாவில் முதன் முறையாக முழுவதும் திருநங்கைகள் அடங்கிய கால்பந்து அணி மணிப்பூரில் உருவாகியுள்ளது.
இம்பாலை சேர்ந்த அரசு சாரா நிறுவனம் ‘யா ஆல்’. இரு ஆண்டுக்கு முன் திருநங்கைகளுக்காக ஆறு பேர் கொண்ட கால்பந்து போட்டிகளை நடத்தியது.
இதையடுத்து முழுவதும் திருநங்கைகள் அடங்கிய 14 பேர் கொண்ட கால்பந்து அணி மணிப்பூரில் உருவாகியுள்ளது.சமீபத்தில் பெண்கள் தினத்தில் (மார்ச் 8) தலா 7 பேர் கொண்ட அணியாக பிரிந்து ‘நட்பு’ போட்டியில் விளையாடினர்.’யா ஆல்’ நிறுவனம் சதாம் ஹன்ஜபம் கூறுகையில்,”மத்திய அரசு திருநங்கைகளை அங்கீகரித்துள்ளது.
ஆனால் இன்னும் பல்வேறு விஷயங்களில் மாற்றம் தேவை. அனைத்து விளையாட்டிலும் திருநங்கைகள் பிரிவில் போட்டிகள் நடத்த வேண்டும்,” என்றார்.