Actress Sneha owns so many crores: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் வலம் வருவது மட்டுமில்லாமல் புன்னகை அரசி என்று பெயர் எடுத்துள்ளார் அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருவது மட்டும் இல்லாமல் திடீரென நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருமே வெகுநாளாக காதலில் ஈடுபட்டிருந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் தற்போது இவர் பிள்ளைகளுக்கு தாயாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை சினேகா மற்றும் பிரசன்னா ஆகிய இருவருக்கும் திருமணம் நடந்து பத்து ஆண்டுகள் ஆகிய நிலையில் பிரசன்னா ஒரு உருக்கமான கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடிகை சினேகா ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அவற்றிற்கு நான் எந்த ஒரு விதிமுறைகளும் தடையும் விதிப்பதில்லை ஏனெனில் திருமணத்துக்கு பிறகு எப்படி ஒரு பெண் நடந்து கொள்ள வேண்டுமோ அதற்கு ஏற்றார் போல் என் மனைவி நடந்து கொண்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் நடிகை சினேகாவின் சொத்து மதிப்பு விவரம் பற்றி சில விஷயங்கள் வெளியாகியுள்ளது அதில் நடிகை சினேகாவிற்கு ஒரு படத்தில் நடிப்பதற்காக சுமார் 25 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறதாம்.
இது ஒரு பக்கம் இருக்க நடிகை சினேகாவின் முழு சொத்து மதிப்பு சுமார் 40 கோடி இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது ஆனால் அவை எந்த அளவிற்கு உண்மை என்ற விவரம் மட்டும் இன்னும் தெரியவில்லை.