20 நிமிடத்தில் ரொம்ப ஈசியான, சுவையான சிக்கன் க்ரேய்வி.. இதை சமைக்க தெரியாதவர்கள் கூட சமைக்கலாம்..
செய்ய தேவையான பொருட்கள்:
சிக்கன் 1கிலோ, எண்ணெய் சிறிதளவு, பட்டை 3, கிராம்பு 4, ஏலக்காய் 2, பிரியாணி இலை 2, இஞ்சி பூண்டு விழுது தேவையான அளவு, பெரிய வெங்காயம் 5, தக்காளி 3, மஞ்சள் தூள் 1 ஸ்பூன், மிளகாய் தூள் 3 ஸ்பூன், தனியா தூள் 3ஸ்பூன், சிக்கன் மசாலா 2ஸ்பூன், சீரக தூள் 2ஸ்பூன், உப்பு தேவையான அளவு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சிதளவு.
செய்முறை :
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு வதக்கவும். அதன்பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது போட்டு அதன் வாசனை போகும் அளவிற்கு நன்றாக வதக்கவும்.வதங்கிய பின் தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.
அதன் பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சிக்கன் மசாலா, சீரக தூள் ஆகியவை போட்டு கிளறவும். அப்புறம் சிக்கன் போட்டு அந்த கலவை சிக்கனில் படும் படி நன்றாக கிளறவும்.
சிறிதளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கிளறி ஒரு தட்டு போட்டு மூடி வைத்து விடவும். 20 நிமிடம் நன்றாக வேகவைக்கவும். இறுதியில் கொத்தமல்லி, கருவேப்பிலை போட்டு இறக்கவும். இப்போது நம்ப சிக்கன் க்ரேய்வி தயார்.