தேவையான பொருள்கள்:
- கொத்தமல்லி தழை – 2 கப்
- மிளகாய் வத்தல் – 2
- புளி – நெல்லிக்காய் அளவு
- பூண்டுப் பல் – 3
- தேங்காய் துருவல் – 3 மேஜைக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- கறிவேப்பிலை – சிறிது
- எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
- கடுகு – 1 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
- கறிவேப்பில்லை – சிறிதளவு
செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கொத்தமல்லித் தழையை சிம்மில் வைத்து வதக்கவும். லேசாக வதக்கி சுருங்கியதும் இறக்கி விடவும். வதக்கிய கொத்தமல்லித் தழையுடன் அரைக்க கொடுத்தவற்றை சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி விட்டு பின்னர் சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து எடுக்கவும்.
அதே கடாயில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து துவையலுடன் சேர்க்கவும். சுவையான கொத்தமல்லித் துவையல் தயார். இது இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.