வாழைப்பூ வடை செய்வது எப்படி??

0
846
vazhai poo vadai
vazhai poo vadai

வாழைப்பூ வடை
தேவை:
சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய வாழைப்பூ, கடலைப்பருப்பு – தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு, பச்சரிசி – ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி – ஒரு சிறிய துண்டு (தோல் சீவவும்), பூண்டு – 8 பல், பச்சை மிளகாய் (அ) சிவப்பு மிளகாய் – 5, சோம்பு – ஒரு டீஸ்பூன், நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை (சேர்த்து) – ஒரு கைப்பிடி அளவு, பெரிய வெங்காயம் – ஒன்று, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு.

செய்முறை:
முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சரிசியை ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் சோம்பு, இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து இரண்டு சுற்று சுற்றி, பிறகு ஊறிய பொருள்களையும் சேர்த்து கொரகொரப்பாகக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம் மற்றும் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து பிசையவும். மாவை வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

சிறப்பு:
பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் நல்லது. கணையம் வலுப்பெறும். மாதவிடாய் நேரத்தில் வரும் அதீத உதிரப்போக்கைக் கட்டுப்படுத்தும். வெள்ளைப் படுதலைச் சரிசெய்யும். கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.